திருநெல்வேலி : தேசிய விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற சேரன்மகாதேவி பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் ஜோலாப்பூரில் தேசிய அளவில் நடந்த கால்பந்து டென்னிஸ் போட்டியில் சேரன்மகாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் சுப்ரீம் பிளசிங் தங்கப்பதக்கம், தங்ககிருஷ்ணன் வெண்கலப்பதக்கம் பெற்றனர். இருவருக்கும் கலெக்டர் செல்வராஜ் பாராட்டு தெரிவித்தார். மாவட்டக்கல்வி அலுவலர் (பொறுப்பு) கிரேஸ் அண்ணஹெலினா, மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதிசற்குணம், உடற்கல்வி ஆசிரியர் பெரியதுரை உடன் இருந்தனர்
No comments:
Post a Comment