Pages

Thursday, November 18, 2010

கொழுந்துமாமலை முருகன் கோவிலில் நவ.21ல் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபவிழா

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கொழுந்துமாமலை அருள்மிகு ஸ்ரீ பால சுப்பிரமணியசுவாமி கோவில் பிரசித்தி பெற்றது ஆகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் திருக்கார்த்திகை தீபம் விழா வெகு சிறப்பாக நடைபெற்வது 

வழக்கம் இந்த ஆண்டு கார்த்திகை 5-ம் தேதி (21.11.2010) ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற உள்ளதுஇக்கோவில் சேரன்மகாதேவி-களக்காடு மெயின் ரோட்டில் மேல்புறம் செல்லும் ரோட்டில் கொழுந்துமாமலை அடிவாரத்தில் உள்ளது. கோவிலில் மூலவர் பாலகன் உருவில் பாலசுப்பிமணியராக கிழக்கு முகமாக இருந்து அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்

இக்கோவிலில் நடைபெறும் பெரிய திருவிழா ஆகும். சேரன்மகாதேவி மற்றும் வெளியூர்களில் இருந்து அனைத்து சமுதாய பொதுமக்கள் ஏராளமானோர்கள் விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். அன்று மூலவர் பாலமுருகன் சுவாமிக்கு காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்கார பூஜைகளும், மாலை 6 மணிக்கு தீப பூஜையும் நடைபெறுகிறது

அன்று மதியம் 1 மணிக்கு பக்தர்கள் புறப்பட்டு கோவில் அருகில் உயரமாக இருக்கும் கொழுந்துமாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றுகிறார்கள். இந்நகழ்ச்சி பல ஆண்டுகளாக முன்னேர்கள் காலத்தில் இருந்தே நடைபெறும் நிகழ்ச்சியாகும். உயரமாக மலை இருப்பதால் ஏற்றுகின்ற தீபம் அனைத்து ஊர்களுக்கும் நன்றாக தெரியும்

மலையில் ஏற்றும் இரு தீபங்களில் அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்பாளும் தீப உருவில் பாலமுருகனுக்கு காட்சி அளிப்பதாக ஐதீகம் திருவண்ணாமலை தீபமாக ஏற்றப்படுகிறதுதீப தரிசனம் கோடி புண்ணியம் என்பதால் அனைத்து ஊர் பொதுமக்கள் பக்தர்கள் தீப தரிசனம் செய்வார்கள். திருவண்ணாமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள் இத்தலம் வந்து சுவாமியை வணங்கி தீப தரிசனம் செய்வது வழக்கம்

அனைத்து பொதுமக்களுக்கு சேரன்மகாதேவியில் இருந்து கோவில் வரை அரசு சிறப்பு பேரூந்துகள் இயக்கபடுகிறது. கோவில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்டுகிறது. மலையில் தீபம் ஏற்ற செல்லும் பக்தர்கள் மறு நாள் காலையில்தான் திரும்புவார்கள்.
எட்வின்(Edwin)

No comments:

Post a Comment